
|
Glory to the name of our Lord Jesus Christ. He who calls upon our names even before we are formed in our mother's womb also called me for his ministry in the year of 1996. I lived a life where people were scared of me and nobody liked me, but Lord pulled me close to him with his everlasting love. The time where I was thinking about whom could love me truly in this world, my Lord spoke to me with his words "In this world, our biological parents could forget us, siblings could abandon us, wife could separate from us, friends could forget us, but there is a God who shows love at any time, he is the only Lord Jesus Christ". As the Lord interrupted me with his words, a question arose in my heart, Is there a God to show love to a fool who could never be loved by anyone? I realized that there is a lord to comfort me and I started to seek him, and I found him. |
After that incident, Lord changed my life completely. My life as a merchant in Canada was changed to live a completely given life for my Lord. So I gave up on all business and started to live a committed life for Lord my Savior. Lord was creating miracles throughout my life after I started to live for him. When I was serving the Lords Servant, God spoke to me through prophecy through them.
For ten years Lord trained me by his servants. In the year of 1999 Lord spoke to me with this prophesizing word "You are my vessel". I did not understand what it meant at that time. But just like how Lord chose Paul and gave him the ministry, God chose me and taught me and gave me his ministries.
As a pastor of Toronto Revival Gospel Church, God has blessed me with his Holy Spirits anointing and heavenly power. Until the second coming of Jesus or till I face death, I will be a truthful servant of him and continue to carry out his ministry with love. Amen.
Pastor Phillip Chris
Toronto Revival Gospel Church
|
யாராலும் விரும்பப்படாதாவானாயும், எல்லோருக்கும் பயமுண்டாக்கிறவனாயும் வாழ்ந்து கொண்டிருந்த என்னை ஆண்டவர் தமது அநாதி அன்பினால் தம்பக்கமாக இழுத்துக் கொண்டார். இந்த உலகத்தில் யார் என்னைஉண்மையாக நேசிப்பார்கள் என்று ஏங்கிதவித்த நேரத்தில் ஒரு நாள் ஆண்டவர் தமது வார்த்தையினுடாக என்னோடு இடைப்பட்டார். இந்த உலகத்தில் எம்மை பெற்றதாய் தந்தை மறக்கலாம். சகோதரங்கள் விலகிப்போனாலும், மனைவி பிரிந்து போனாலும், நண்பர்கள் மறந்து போகலாம். ஆனாலும் உன்னை எந்த நிலையிலும் நேசிக்கிற தெய்வம் ஒருவர் உண்டு அவர் தான் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து என்று என்னோடு பேசினார். அப்பொழுதுதான் என்உள்ளத்தில் ஒரு கேள்வி ஏற்ப்பட்டது. இப்படிப்படட பாவியை யாராலும் விரும்பப்படாத ஒருவனை நேசிக்க ஒரு ஆண்டவர் இருக்கிறார். என்னையும் அரவணைக்க ஒருதெய்வம் இருக்கிறார் என்று அவரை தேட ஆரம்பித்தேன். கண்டு கொண்டேன். அதற்கு பின்பாக முழுமைகாக என்னுடைய வாழ்வை ஆண்டவர் மாற்றினார். கனடா தேசத்தில் ஒரு வியாபாரியாக இருந்த என்னுடை வாழ்வு ஆண்டவருக்காக மட்டும் வாழவேண்டும் என்றநிலைமைக்கு மாற்றப்பட்டது. ஆதனால் எல்லா வியாபாரத்தையும் விட்டு முழுமையாக வாழ்க்கையை ஆண்டவருக்கு கொடுத்து வாழத் தொடங்கினேன். ஆண்டவர் அநேக அதிசயமான காரியங்களை என்வாழ்வில் செய்து வந்தார். அநேக தேவ ஊழியர்களுக்கு பணிவிடை ஊழியம் செய்தநாட்களிலே, தேவதாசர்கள் மூலமாக தன்னுடைய தீர்க்கதரிசன வார்த்தையின் மூலம்என்னோடு பேசினார். ஏறக்குறைய பத்துஆண்டுகள் அநேககாரியங்களை ஊழியர்கள் மூலமாக என்னை பயிற்சித்தார். 1999 ஆண்டு தம்முடைய தீர்க்கதரிசன வார்த்தையினால் “ நாம் தெரிந்து கொண்ட பாத்திரம்” என்று என்னோடு பேசினார். அப்போது நான் அதுஎன்னவென்று அறியவில்லை. ஆனால் இப்பொழுது எப்படியாக பவுலை ஆண்டவர் தெரிந்து கொண்டு தாமே ஊழியத்தையும் கொடுத்தாரோ அதே வண்ணமாக ஆண்டவர் என்னையும் தெரிந்து போதித்து ஊழியத்தையும் தந்தார். ரொரண்ரோ எழுப்புதல் சுவிஷேச சபை போதகராக இந்த கனடா தேசத்திலே ஊழியத்தை செய்ய பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பரலோக வல்லமையையும், கொடுத்திருக்கிறார். ஆண்டவர் வரும் வரையும், அல்லா விட்டால் மரணம் நேரிடும் வரையும், அவருக்கு உண்மையாக இருந்து அவரின் ஊழியத்தை செய்ய ஆசையாக தொடருகின்றேன். ஆமென். போதகர் பிலிப் கிறிஸ்.ரொரண்ரோ எழுப்புதல் சுவிஷேச சபை |











