
கனடா தேசத்தில் ரொரண்ரோ பட்டணத்தில் 2004ம் ஆண்டு மாசிமாதம் ஆண்டவர் திருச்சபையாக எம்மை அழைத்து அதற்கு ரொரண்ரோ எழுப்புதல் சுவிசேஷ சபை என்ற பெயரைக் கொடுத்தார். ஆண்டவர் சபையாக எம்மை அழைத்த போதே பெரிதான ஒரு நேக்கத்தையும் ஓரு திட்டத்தையும் வைத்து எம்மை சபையாக அழைத்திருந்தார்.
கனடா தேசத்தில் ஏறக்குறைய ஐந்து(5) லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழுகிறர்கள் அதிலும் ரொரண்ரோவில் மூண்டரை(3.5) லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாழுகின்றார்கள இலங்கை தேசத்துக்கு வெளியே அதிகமாக எங்கள் தமிழ்மக்கள் வாழும் நாடு கனடாதேசமாக இருக்கின்றது.
ஆகவே தேவன் இந்த ஐனங்கலுக்கு சத்திய சுவிசேஷகத்தை அறிவிக்க சித்தம் கொண்டார். அதனால் தேவன் சபையாக அழைத்து தமது சபைக்கு ரொரண்ரோ எழுப்புதல் சுவிசேஷ சபை என்ற பெயரை கொடுத்து எல்லா மக்களின் ஆவிக்குரிய வாழ்விலும் ஒரு எழுப்புதல் வரவும் சுவிசேஷசத்தை அறிவுக்கும் பணியில் எழுப்புதல் அடையவும் தேசம் சந்திக்கபடவும் எமக்குள் திராத ஒரு தாகத்தை கொடுத்தார்.
இந்த தேசத்தில் வாழும் எம்மக்கள் கண்ணீரிலும்; பிரிவினிலும் துக்கத்திலும் மரனத்தின் பிடியினிலும் இருந்து காக்கப்படவுமம்; பாவத்திலிருந்து பரிபூரணமாக மீட்கப்படவும் பரலோகத்தில் சேர்கப்படவும் நரகம் வெறுமையாகவும் ஆண்டவர் ரொரண்ரோ எழுப்புதல் சுவிசேஷ சபையாக எம்மை அழைத்தார் ரொரண்ரோ என்பதின் அர்த்தம் பரிசுத்தம் ஆகவே பரிசுத்தத்தை மையமாக ஆண்டவர் வைத்து இந்த சபையை நடத்தி வருகிறார்.
அதனால் ஆண்டவர் எமக்குக் கொடுத்த சபையின் தரிசனம்
ஐனங்கள் கர்தருக்குள் பரிசுத்தமாக வாழ வேண்டும்
சத்தியத்தில் நிலைத்திருக்க வேண்டும்
ஐனங்களின் வாழ்வு வேத வார்தைக்குள் இருக்க வேண்டும்
ஐனங்கள் பரலோக தரிசனமுடையவர்களாக இருக்க வேண்டும்
எல்ல ஐனத்துக்கும் சுவிசேஷகம் அறிவிக்கபட வேண்டும்
இலங்கையில் திக்கற்ர பிள்ளைகள் விதவைகள் அங்கவீனர்கள் விசாரிக்கப்பட வேண்டும
இலங்கையில்:
சபைகள் ஸதாபிக்கபட வேண்டும
சபைகள் தாங்கப்பட வேண்டும
சுவிசேஷசம் அறிவிக்கபட வேண்டும
ஊழியர்கள் தாங்கப்பட வேண்டும.
இப்படியான தரிசனங்களை தந்து ஆண்டவர் எம்மை நடத்தி வருகிறார். அழைத்தவர் உண்மையுள்ளவர் முடிவு பரியந்தம். எம்மை நடத்துவாராக.










